உண்மையான அன்பு உன்னிடம் இல்லாத போது…

உண்மையான அன்பு உன்னிடம் இல்லாத போது...

உண்மையான அன்பு
உன்னிடம் இல்லாத
போது என்னுடைய
பாசம் எல்லாம்
உனக்கு ஏமாற்றமாகத்தான்
தெரியும்…

சிறு வயது முதலே நாம் ஒருவர் மீது அன்பாக இருந்தால், அவரும் நம்மீது அன்பாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அதோடு, அவர் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும், நாம் கேட்பதை செய்ய வேண்டும். நமக்கு ஒருவரை பிடிக்கவில்லையா, இவரும் அவரோடு சேரக் கூடாது. இப்படி பல கண்டிஷன்கள். இதில் எது நடக்காவிட்டாலும், மனதின் நிம்மதி அதோகதி. இப்படி நம்மை வாட்டும் அன்பு நமக்குத் தேவைதானா?

யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அருகில் மனிதன் இருந்தாலும், மரம் இருந்தாலும், விலங்கு இருந்தாலும், உங்கள் கண்கள் திறந்து இருந்தாலும், நீங்கள் கண்மூடி அமர்ந்திருந்தாலும், உங்கள் உணர்வுகள் இனிமையாய் இருக்குமானால், அதுதான் ‘அன்பு’.