அவன் நட்பிற்கு இணை ஏதுமில்லையே வையகத்தில்

friendship kavithai in tamil

தாயாய்,தந்தையாய்
நல்லதோர் ஆசானுமாய்
இருப்பவன் நண்பன்
அவன் நட்பிற்கு இணை
ஏதுமில்லையே வையகத்தில்.

ஆறி போன காபி
அரை குறை குளியல்
இடி முழங்க கடிகாரத்தின் சத்தம்
கடைசி நொடியில் படியில் பயணம்
வகுப்பு இடைவேளையில் அரட்டை
வகுப்பு நடக்கும்போது குறட்டை
எங்கள் காக்கை கூட்டத்திற்கு தோழியின் மதிய உணவு
மாலை நேரத்து மழையில் நண்பனுடன் திருட்டு தம்மும் தேநீரும்
வகுடெடுத்த வாக்குகள் எல்லாம் வருடம் கழித்து மறைந்து போயின
நாட்கள் நொடி முல்லை விட வேகமாய் ஓடின ,
இத்தனை நினைவுகளும் எத்தனை முறை
என் இதயத்தை தட்டுமோ என்று
இன்று உங்கள் முன்னாள் கண்ணீர் மலக்க நிற்க்கிறேன்..!