அன்னையர் தினம் கவிதைகள் 2018

mothers day 2018 quotes in tamil

உலகம் உருள உதவும் உன்னதம்
அகிலம் அளக்க இயலா அற்புதம்
எங்கும் நிறைந்த
அன்னை நீயே உலகின்
உரைக்க முடியா வேதம்

அன்னையின் அன்பு இதயம்
காலத்தை வெல்லும் காவியம்
நாளும் நனைந்த
மனம் காணும் அன்னையே
நித்தம் வாழ்வின் அழியா சத்தியம்

அன்பின் அணையாவிளக்கு அன்னையே
நன்னெறியில் வளர்த்தாய் என்னையே
அன்னையர் தினம்
அகிலம் கொண்டாட
எல்லாப் பெண்களில் கண்டேன் உன்னையே ..!

mothers day quotes tamil

அம்மா.
ஆயிரம் கோடி உறவுகள் இருந்தாலும்
அந்த உறவுகளை எமக்கு அறிமுகப்படுத்தியவள்
நீதானே அம்மா,
வாய் பேசாத உயிரினம் கூட
அம்மா என்றுதானே அழைக்கிறது அம்மா, அம்மா.
உன் குழந்தைகள் மழலை மொழியில்
அம்மா என்று முதலில் உன்னை அழைக்கும் போது உனக்கு எப்படி இருந்தது அம்மா
அம்மா அன்று உன் முகத்தில்
சந்தோசத்தை நாங்கள் கண்ணால்
பார்க்கவில்லை அம்மா,
உங்கள் சந்தோசமான முகத்தை
இன்று பார்க்க ஆசை அம்மா,
இன்று அன்னையர் தினம் அம்மா.
நீங்கள் எங்களை பெற்றெடுத்ததுக்காக
நாங்கள் அனைவரும் நன்றி சொல்லும் தினம் அம்மா,
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
அம்மா உங்களை தினமும்
வாழ்த்திக்கொண்டே இருப்போம் அம்மா.,
இன்றைய தினம் அனைத்து அம்மாக்களுக்கும்
எங்களது இதயம் கனிந்த
அன்னையர்தின வாழ்த்துக்கள்..!

m kumaran son of mahalakshmi movie quotes

அன்னையின்றி பிறப்பில்லை எவருக்கும்
அவரின்றி தெய்வமில்லை அகிலத்திற்கும் !
அன்போடு பாசமுடன் வளர்ப்பவள் அன்னை
அயராது தளராது நமை ஆளாக்கும் அன்னை !

விழிகளுக்கு இமைபோல் நமை காத்திடுவாள்
​விழுதுகள் நமக்கு வாழ்வின் ஆணிவேரவள் !
நம்பசி போக்கிட அவள்பசியை துறந்திடுவாள்
நம்நலன் காத்திடவே நாளும் உழைத்திடுவாள் !

தனைவருத்தி நமைஉயர்த்தி அழகு பார்ப்பவள்
​தன்னலம் இல்லாத நிகரில்லா இமயம் அவள் !
பாரமாக நினைததிட்டு ஓரமாய் ஒதுக்கினாலும்
பாசம் குறையாது வாழ்த்திடும் இதயம் அன்னை!

அன்னையின் அரவணைப்பு தென்றலின் சுகம்
அன்னையின் அன்பே ஆஸ்கார் விருது நமக்கு !
அன்னையை தொழுது நாளை தொடங்கிடுங்கள்
அன்னையின் மடியே இன்பத்தின் இமயம் நமக்கு !

வயோதிகர் ஆனதால் வளர்த்திட்ட அன்னையை
முதியோர் இல்லம்தேடி முன்னின்று அனுப்புவர் !
தள்ளியே வைத்தாலும் தானாகவே சென்றாலும்
தாயுள்ளம் மாறாது வாழ்த்திடுமே பிள்ளைகளை !

தாரம் வந்தவுடன் தாயை மறந்திடுவர் சேய்கள்
ஈடேது இணையேது இவ்வுலகில் அன்னைக்கு !
கலங்காமல் காத்திடுங்கள் நிலையாய் தாயை
வணங்கிடுங்கள் அன்னையை நாம் வாழும்வரை !